தமிழீழ தேசிய தலைவரின் மாவீரர் நாள் உரை 1990

In தலைவரின் மாவீரர் நாள் உரைகள்

தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
நவம்பர் 27, 1990.

எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே…

தமிழீழத் தேசிய சுதந்திரப் போரில் வீர மரணத்தைத் தழுவிக் கொண்ட எமது விடுதலை வீரர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நளாக கார்த்திகை 27 ஆம் நாள் நினைவு கூரப்படுகிறது. இதுவே எமது தேசிய நாளுமாகும்.

எமது வீர சுதந்திர வரலாறு இந்த மாவீரர்களின் இரத்தத்தால் எழுதப்பட்டிருக்கிறது. இவர்களது இறப்புக்கள் அர்த்தமற்ற இறப்புக்கள் அல்ல. இந்த வீரர்களின் சாவுகள் எமது சரித்திரத்தையே இயக்கும் உந்து சக்தியாக, எமது போராட்டத்தின் உயிர்மூச்சாக எமது போராளிகளின் உறுதிக்கு உத்வேகமளிக்கும் ஊக்குசக்தியாக அமைந்துவிட்டது. இந்த மாவீரர்கள் காலத்தால் சாகாத சிரஞ்சீவிகள்: சுதந்திரச் சிற்பிகள்: எமது மண்ணிலே ஒரு மாபெரும் விடுதலை எழுச்சிக்கு வித்திட்டுச் சென்ற வீரமறவர்கள். எமது இனத்தின் சுதந்திரத்திற்காக, பாதுகாப்பிற்காக தமது இன்னுயிரை அர்;ப்பணித்துள்ள இந்த மகத்தான தியாகிகள் காலம் காலாக எமது இதயக் கோவிலில் பூசிக்கப்பட வேண்டியவர்கள்.

ஒரு விடுதலை வீரன் சாதாரண வாழ்க்கையை வாழும் ஒரு சாதாரண மனிதப் பிறவி அல்ல. அவன் ஒரு இலட்சியவாதி. ஒரு உயரிய இலட்சியத்திற்காக வாழ்பவன், தனக்காக வாழாமல் மற்றவர்களுக்காக வாழ்பவன். மற்றவர்களின் விடிவுக்கக, விமோசனத்திற்காக வாழ்பவன். சுய நலமற்ற, பற்றற்ற அவனது வாழ்க்கை உன்னதமானது, அர்த்தமானது, சுதந்திரம் என்ற உன்னத இலட்சியத்திற்காக அவன் தனது உயிரையும் அர்ப்பணிக்கத் துணிகிறன். எனவே, விடுதலைவீரர்கள் அபூர்வமான மனிதப் பிறவிகள். அசாதாரணமான பிறவிகள்.

ஒரு விடுதலை வீரனின் சாவு, ஒரு சாதாரண மரண நிகழ்வு அல்ல. அந்தச் சாவு, ஒரு சரித்திர நிகழ்வு. ஒரு உன்னத இலட்சியம் உயிர்பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலைவீரன் சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்துவிடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச் சக்தியாக மற்றவர்வகளைப் பற்றிக்கொள்கிறது. ஒரு இனத்தின் தேசிய ஆன்மாவை தட்டி எழுப்பிவிடுகிறது.

தமிழீழ சுதந்திரப்போர் இன்று ஆசியக் கண்டத்தின் முதன்மையான விடுதலைப் போராட்டமாக சர்வதேசப் புகழ் அடைந்திருக்கிறது. மூன்றாம் உலகில் ஒடுக்கப்படும் இனங்களுக்கும், அடக்கப்படும் மக்களுக்கும் எமது புரரட்சிகர ஆயுதப் போராட்டம் ஒரு முன்னுதாரணமாக, வழிகாட்டியக அமைந்திருக்கிறது. சிங்கள ஆயுதப் படைகளையும் உலகின் மிகப் பெரிய இந்தியப் படைகளையும் தனித்து நின்று போராடி எமது மாவீரர்கள் படைத்த மகத்தான சாதனைகள் இன்று உலக வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது. நீண்டதும், கடினமனதும், அபாயகரமானதுமான இந்த யுத்தங்களில் எமது விடுதலை வீரர்கள் சந்தித்த இன்னல்களை இடையூறுகளை, துன்பங்களை எழுத்தில் விபரிக்க முடியாது. இரும்பையொத்த இலட்சிய உறுதியுடன், எதையும் தாங்கும் இதயத்துடன், சாவுக்கு அஞ்சாத வீரத்துடன் எமது வீரர்கள் போராடினர்கள். போர்க்களத்தில் வீரமரணத்தைத் தழுவினார்கள்.

நான் உயிருக்கு உயிராக நேசித்த தோழர்கள், என்னுடன் தோளோடு தோள் நின்று போராடிய தளபதிகள், நான் பல்லாண்டு காலமாக வளரத்தெடுத்த போராளிகள் களத்தில் வீழ்ந்த போதெல்லாம் எனது இதயம் வெடிக்கும். ஆயினும் நான் சோர்ந்து போவதில்லை. இந்த இழப்புக்கள் எனது இலட்சிய உறுதிக்கு மேலும் மேலும் உரமூட்டியிருக்கிறது.

இந்த மாவீரர்களை நான் கௌரவிக்கிறேன். அவர்களுக்கு சிரம் தாழ்த்தி வணக்கம் செலுத்துகிறேன். அவர்களது தியாகத்தையும், வீரத்தையும், விடுதலைப் பற்றையும் எண்ணிப் பார்க்கும்போது எனது உள்ளம் பெருமை கொள்கிறது.

இந்த மண்ணின் மைந்தர்களைப் பெற்றெடுத்த பெற்றோர்களையும் நான் போற்றுகிறேன். உங்களது குழந்தைகள் தமது உயிருக்கும் மேலாக தமது தாய் நாட்டின் சுதந்திரத்தை நேசித்தார்கள். இந்த உத்தமமானவர்களை ஒரு புனித இலட்சியத்துக்கு உவந்தளித்த பெற்றோராகிய நீங்கள் நிச்சயம் பெருமை கொள்ள வேண்டும். உங்களது குழந்தைகள் சாகவில்லை, சரித்திரமாகிவிட்டார்கள்.

எமது தாய்நாடு விடுதலை பெறவேண்டும். எம்மைப் பிணைத்திருக்கும் அடிமை விலங்குகள் உடைத்தெறியப்பட வேண்டும். எமது மக்கள் சுதந்திரமக, கௌரவமாக பாதுகாப்பாக வாழ வேண்டும். இந்த இலட்சியம் ஈடேற வேண்டுமாயின் நாம் போராடித்தான் ஆகவேண்டும். இரத்தம் சிந்தித்தான் ஆக வேண்டும்.

நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கிறோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தால் நீர்பாய்ச்சி வளர்க்கிறோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

வே. பிரபாகரன்
தலைவர்
தமிழீழ விடுதலைப் புலிகள்.

 

 

Share this:

Join Our Newsletter!

Love Daynight? We love to tell you about our new stuff. Subscribe to newsletter!

You may also read!

எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

தமிழர் தளம் எமக்கான ஒரு சமூக வலைத்தளம் முடிந்தவரை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணக்கு உருவாக்கும் முறை. Post.eelapparavaikal.com என்ற இணையத்திற்கு செல்லுங்கள் இதில் Register என்ற பட்டனை அழுத்தவும். அதில் userName ,email,

Read More...

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம்

எரிந்த மரங்களின் எச்சம் நாமாவோம் ******************************************* எரிக்கப்பட்ட காடு நாம். ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது எஞ்சிய வேர்களில் இருந்து.... இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய் தொலைந்தவர்களுக்கான அழைப்பாய் இழந்த பின்னும் இல்லம் மீள்தலாய் தொன்று தொடும் சுதந்திர விருப்பாய் தொடரும் எம்

Read More...

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள்

நாங்கள் கரிகாலன் அரிவாள்கள் கல்லறைக்குள் வாழ்பவரே காவியமே கதை கேளும் கரிகாலன் கண்ணசைவே தனி ஈழம் உருவாக்கும் புலி வீரர் நடந்த தடம் புழுதியாய் பறந்ததில்லை புகழ் பூத்து நின்ற நிலம் புயலடித்து ஓய்ந்ததில்லை கல்லறை முன் கை

Read More...

Leave a reply:

Your email address will not be published.